15803. மாளும் மாந்தரே நீர் கேளும்

1 மாண்டிடும் மாந்தரே கேளும்,
முடிவு வந்திதோ,
காலம் விரைந்தே செல்லுதே,
குற்றமுள்ளோர் திகைக்க.

2 இருளிலும் காணும் கண்கள்,
இரகஸ்யம் தெளிவாய்,
மெல்லியதாம் சம்பாஷணை,
வெளிச்சமாய் எல்லாம்.

3 குற்றம் செய்தோர் நடுங்கியே,
பாவம் வெளிப்பட,
உள் யோசனை எண்ணங்களும்,
மறைவாய் வைத்துமே.

4 துக்கம் திகிலும் அண்டுமே,
மறைத்து வைத்தாலே,
வேதனை நெஞ்சை கொல்லுமே,
விஸ்வாசம் சாகவே.

5 அச்சுறுத்தார் தீயோரையும்,
நீதி அற்றோரையும்,
நீதிபரர் அன்பாகவே,
உண்மை நன்மை காண்பார்.

6 நாணுவார் வாழ்வில் நீதி செய்தோர்,
தம்கிரியை வெளிப்பட,
தன் பெயர் கண்டே ஆவலாய்,
தம் குற்றம் மறவாமல்.

7 இரவில் மறையும் சூரியன்,
பூமியின் நிழலாலே,
மீண்டும் தன் காந்தம் வீசியே,
பிரமாண்டமாய் காலையில். ஆமேன்.

Text Information
First Line: மாண்டிடும் மாந்தரே கேளும்
Title: மாளும் மாந்தரே நீர் கேளும்
English Title: Mortals, give ear, the awful day
Author: John Needham
Translator: S. John Barathi
Meter: CM
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [மாண்டிடும் மாந்தரே கேளும்]
Composer: John Bacchus Dykes
Key: G Major or modal
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us