1 அருளின் வடிவாம் ஆண்டவா,
எந்தன் ஜெபமே கேளுமே,
கறைகளை நீரே நீக்குமே,
நம்மை பிரித்திடும் சுவர்களாம்
நம்மை பிரித்திடும் சுவர்களாம்.
2 காருண்யத்தின் சன்னிதானம்,
தாரும் நானும் ஆனந்திக்க,
உம் நீதி நியாயம் கூறுவேன்
போற்றி துதித்து பாடியே
போற்றி துதித்து பாடியே.
3 இரத்தம் சிந்தும் பலியினால்,
தீராதெந்த பாவமும்,
சிலுவை தந்த இரட்சிப்பொன்றே,
இன்றும் பாவம் போக்குமே
இன்றும் பாவம் போக்குமே.
4 பாவத்தில் சிக்குண்ட உள்ளமே,
தள்ளிடாரே என்றுமே,
தாழ் மையாக வேண்டிட,
அதுவே நமது பலியன்றோ?
அதுவே நமது பலியன்றோ?
Source: The Cyber Hymnal #15542