1 இதோ காண்பாய் தெய்வாசனம்,
தம் தந்தை ஸ்தலத்தில்,
தேவாட்டுகுட்டி நாமத்தில்
முன் கேளாகீதமே.
2 மூத்தோர் தொழ அப்பாதமே,
பின் சபையோர் வணங்கவே,
மணம் வீசும் எம் காணிக்கை
இன் கீதவாத்யமே.
3 தூயோரின் வேண்டுதல் அது,
பாமாலை பாடலும்,
கனிவாய் கேட்பார் இயேசுவே
நாம் போற்ற ஏற்கிறார்.
4 விண் தந்தையே யார் காணுவார்,
உம் ஆழ் இரகஸ்யங்கள்,
யார் திறப்பார் ஜீவ சுருள்
கூடுமோ முத்திரையும்.
5 உம் ஆணை தாமே மேற்கொள்வார்,
தகுந்தோர் அவரண்டை,
இறையாண்மையின் திறவுகோல்
விண் மரண நரகிற்கும்.
6 பலியுண்ட குமாரனே,
சதா துதி புகழுண்டாம்,
மீட்பு மகிமை ஆனந்தம்
என்றும் உம் சிறசின் மேல்.
7 உம் தயவால் எமை மீட்டீரே,
எம்மை கட்டவிழ்த்தே,
இராஜாக்கள் போதகருமாய்
உம்மோடென்றும் ஆள.
8 இப் பூமியும் இயற்கையும்,
உம் ஆளுகையின் கீழ்,
நீக்கும் தாமத நாட்களை,
உம் வாக்கு நிறைவேற.
Source: The Cyber Hymnal #15590