1 உம் வழியே ஆம் ஆண்டவரே,
குயவன் நீரே, களிமண் நான்,
வனையும் என்னை உம் சித்தம் போல்,
காத்து நிற்கின்றேன், அசையாமல்.
2 ஆராய்ந்து பாரும் இன்றென்னையே,
சுத்திகரியும், வெண்பனிபோல்,
கும்பிடுகின்றேன் உம்மையே நான்,
தாழ்மையாய் வீழ்ந்து உம் பாதத்தில்.
3 காயமுற்றோனாய் வேண்டுகிறேன்,
ஆற்றல் என் ஆற்றல், உமதென்றும்,
தொட்டென்னை தேற்றும் மீட்பரே நீர்,
என் காயம் முற்றும் குணமாக்கும்.
4 பற்றிடும் என்னை முற்றிலுமாய்,
நிரப்பிடும் நீர் உம் ஆவியால்,
இயேசுவே என்னில் வாழ்ந்திடுமே,
மற்றோரும் காண என்னில் வாழும்
ஆமேன்.
Source: The Cyber Hymnal #15633