![Text Text](https://hymnary.org/sites/hymnary.org/themes/newhymn/icons/20x20/page-text.png)
Author: Anonymous; John T. McFarland; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15805 Lyrics: 1 மாடடை குடில் ஒன்றில்
கட்டில் மெத்தை இன்றி,
நம் பாலன் இயேசு தூங்க
வெறும் புல் தான் மெத்தை,
விண் நட்சத்திரம் காண
அவர் தூங்கும் இடம்,
நம் ஏழை இயேசு பாலன்
புல் மீதுறங்க.
2 மா மோ மே பசு காளை
சப்தம் கேட்டு எழ,
ஆனால் விந்தை இயேசு பாலன்
அழவே அழாமல்,
நான் உம்மை நேசிக்கின்றேன்
என்னை பாரும் நீரே,
என் அருகே இரும் காரும்
காலை வரை.
3 நான் உம்மை வேண்டுகின்றேன்
என்னோடே இரும்,
என் சமீபம் என்றும்
தங்கி நேசித்திடும்,
என்னைப்போல் எல்லோரையும்
நேசிப்பீர் நம்புவேன்
எம்மை உந்தன் பிள்ளையாக்கும்
உம்மோடென்றும் வாழ. Languages: Tamil Tune Title: [மாடடை குடில் ஒன்றில்]
மாடடை குடில் ஒன்றில்