Author: Fanny Crosby; S. John Barathi Meter: 8.7.8.7 D Appears in 1 hymnal First Line: வந்தோம் வந்தோம் யாம் எல்லோரும் வல்ல நாதா உம் இல்லம் Lyrics: 1 வந்தோம் வந்தோம் யாம் எல்லோரும் வல்ல நாதா உம் இல்லம்,
உந்தன் ஞான வார்த்தை கேட்க, கேட்டு பற்றி நடக்க,
தாழ்மையாய் கடமை கற்றே வீழ்ந்தும் பாதம் அடைந்தே,
உம் மகிமைப்பேரொளிதான் சூழ்ந்த உந்தன் ஆசனம்.
2 கீதம் பாடி வாழ்த்திப்போற்றி உந்தன் அன்பின் ஈவிதே,
பாய்ந்தே பொங்கி ஓடி எங்கும் மா பெரிய கடல் போல்,
எங்கள் உள்ளம் மகிழ் கொண்டே நாங்கள் பாடி போற்றவே,
அல்லேலுயா அல்லேலுயா எங்கட் காய் பலியானீர்.
3 வேண்டி ஜெபித்து மன்றாடி உந்தன் ஆவி புறாபோல்,
வந்திறங்கி எங்கள் மீதே கிருபையின் கரமன்றோ?
உம்மை கெஞ்சி வேண்டி நின்றோம் பாதுகாத்தருள்வீரே,
எங்கள் கரம் விரைவாக எங்கள் உள்ளம் உமதாய். ஆமேன்
Used With Tune: CONVERSE
வந்தோம் வந்தோம் யாம் எல்லோரும்