15792 | The Cyber Hymnal#15793 | 15794 |
Text: | மகிமையின் எல்லை முதல் |
Author: | James Montgomery |
Translator: | S. John Barathi |
Tune: | [மகிமையின் எல்லை முதல்] |
Composer: | Henry Thomas Smart |
Media: | MIDI file |
1 மகிமையின் எல்லை முதல்
பூமி எங்கும் பறந்து,
பாடினீர் படைப்பினன்று
மேசியா வருகையும்,
பல்லவி:
வந்து வாழ்த்தி போற்றி பாடி
இராஜ பாலன் தொழுவோம்.
2 மேய்ப்பர் மந்தை காத்திருக்க
இராவின் இருள் குளிரில்,
மண்ணோருடன் விண்ணின் தேவன்
சஞ்சரிக்க ஒளியாய், [பல்லவி]
3 ஞானியரே யோசனை ஏன்?
ஜோதி எங்கும் வீசுதே,
வாரும் பாரும் மாந்தர் வாஞ்சை
விந்தை நட்சத்ரம் கண்டீர், [பல்லவி]
4 தூய ஆவி கொண்ட நீங்கள்,
பயத்தோடு நம்பியே,
காத்திருக்க வேந்தர் வந்தார்
தோன்றுவார் தம் ஸ்தலத்தில், [பல்லவி]
5 வாஞ்சித்தே மனந்திரும்ப
நரகத்தை தவிற்க,
நியாயத்தீர்ப்பு தீர்த்திடாமல்
தயவாய் கட்டவிழ்க்க, [பல்லவி]
6 இன்று காணும் பாலனிவர்,
தன் தந்தையின் ஸ்தானத்தில்,
தேசம் யாவும் அவர் முன்னர்
முடக்கும் முழங்கால்கள். [பல்லவி]
7 அவர் படைப்பாய் நாம் ஒன்றாய்
பிதா சுதன் ஆவிக்கு
என்றும் ஒன்றாய் ஓர் தொனியாய்
மூவரான ஏகர்க்கே. [பல்லவி]
ஆமேன்.
Text Information | |
---|---|
First Line: | மகிமையின் எல்லை முதல் |
Title: | மகிமையின் எல்லை முதல் |
English Title: | Angels from the realms of glory |
Author: | James Montgomery |
Translator: | S. John Barathi |
Refrain First Line: | வந்து வாழ்த்தி போற்றி பாடி |
Meter: | 87.87.87 |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [மகிமையின் எல்லை முதல்] |
Composer: | Henry Thomas Smart |
Key: | B♭ Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |