15829. யாம் பிறந்த எம் தேசமே

1 யாம் பிறந்த எம் தேசமே,
எம் அன்பும் சேவையும் ஆண்டாண்டாய்,
யாம் வளர்ந்த எம் இடம் அமர்ந்து,
நல் ஆணும் பெண்ணுமாக இணைந்து

2 எங்கள் தந்தாய் நீர் அன்பாக,
ஆம் கேளுமே எங்கள் வேண்டுதல்,
வரும் காலம் நாங்கள் கட்டிட,
மறவாமலே எங்கள் முன்னோரை.

3 வாலிபத்தில் வலிமையாய்,
மெய் ஜாக்ரதையாய் உறுதியுடன்,
எம் காலத்தில் உம் கிருபை தந்திடும்,
சொல் வாய்மையாய், வாழ செய்திடும்.

4 தன்னைத்தானே நாங்கள் ஆள,
மா கண்யமாய், இரா பகலும்,
நல் தியாகமாய் எத்தேவை வரினும்,
துணிந்தே செயலாற்ற வீரராய்.

5 ஞானம் தாரும் எம் தேவைக்காய்,
உம் நீதி எங்களை ஆளவே,
எம் நண்பர்கள் வழி அல்லவே,
ஊர் போகும் பாதையில் போகாமல்.

6 தந்திடுமே உம் வல்லமை,
எம் சொல்லும் செயலும் நேர்மையாய்,
உம் கிருபையால் நலிந்தோர் காக்க,
இம்மண்ணோர் வேதனை தீர்க்கவும்.

Text Information
First Line: யாம் பிறந்த எம் தேசமே
Title: யாம் பிறந்த எம் தேசமே
English Title: Land of our birth, we pledge to thee
Author: Rudyard Kipling
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [யாம் பிறந்த எம் தேசமே]
Composer: Thomas Williams
Key: D Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us