Author: Sarah J. Graham; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15693 First Line: கல்வாரி, சிலுவையில், நமக்காக, மரித்தாரே Refrain First Line: கல்வாரியில் கல்வாரியில் Lyrics: 1 கல்வாரி, சிலுவையில், நமக்காக, மரித்தாரே,
தம் தூய இரத்தத்தையே, சிந்தியே,
நம்மை மீட்க, ஜீவ ஊற்றாய் பாய்ந்திடுதே,
பனி போல வெண்மையாய், எனக்காக
கல்வாரி மீதே, எனக்காய், ஆம் எனக்காய்,
பல்லவி:
கல்வாரியில் கல்வாரியில்,
எனக்காக, மரித்தாரே
ஆம் சிலுவையில் அன்று.
2 ஆ என்ன, விந்தையிது? அவர் பாதம்,
சேர்த்தாரென்னை, விந்தையான தெய்வன்பிதே,
என்னையே, அர்ப்பணிப்பேன், எந்தன் ஆவி
எந்தன் எல்லாம், முற்றும் தந்தேன் ஆம் மெய்யாய்,
எனக்காக, கல்வாரி மீதே, எனக்காய், ஆம் எனக்காய், [பல்லவி]
3 ஏற்றுக்கொள்ளும், என் இயேசுவே, என்றும் என்னை,
உம் பிள்ளையாய், நீரே என்றும் என் சொந்தமே,
என்னுடன், வாசம் செய்யும், பாவம். போக்கி
தூய்மையாக்கும், உந்தன் இரத்தம் சிந்தினீர்,
எனக்காக, கல்வாரி மீதே சிந்தினீர், உம் இரத்தமே, [பல்லவி]
4 சிலுவையில் தொங்கும் நேரம், இருள் மேகம்,
சூழ்ந்ததே, எல்லாம் முடிந்ததென்றார்,
தலை சாய்த்து ஜீவன் விட்டார். அவர்
ஜீவன் தந்ததினால், மனுக்குலம் மீண்டதே,
நமக்காக, கல்வாரி மீதே, சிந்தினார் தம் இரத்தமே [பல்லவி]
Languages: Tamil Tune Title: [கல்வாரி, சிலுவையில், நமக்காக, மரித்தாரே]
கல்வாரி சிலுவையில்