Choose a text to compare against: | Compare to:These texts are sorted by similarity. Texts in green are more similar to the current text, and red ones are more different. |
1 ஆம் சூர்யன் சாயும் நேரமே, நோவுற்றோர் உம்மை சூழ்ந்தனர், உபாதை வேதனை கொண்டோராய், வந்தனர் மகிழ்ந்தே சென்றனர். 2 இந்நாளும் மாலையானதே, துன்பற்றோர் இன்றும் வந்திட்டால், உம்மை யாம் காண கூடுமோ? நீர் சமீபம் என்றறிவோம். 3 எம் வேதனை நீர் தீர்ப்பிரே, துக்கத்தால் சோர்ந்து நோயினால், உம்மையே நேசிக்காதோறும், அன்பானோர் தம்மை இழந்தோறும். 4 பூலோக பாரம் தாங்காமல், பாவத்தின் சோர்வும் நீங்காமல், துக்கத்தில் மூழ்கி மீளாமல், நீரின்றி யார்? மீட்ப்பார் எம்மை. 5 இப்பூவின் மாயை அறிந்தோர், ஆனாலும் மீளாதோருண்டு, நண்பரால் வேதனை கொண்டோரும், உம் நட்பை அறிந்திடாதோரும். 6 யாம் யாரும் நல்லோய்வு கொள்ளோமே, பாவமற்றோர் எம்மில் இல்லை, சாந்தமுள்ளோர் சேவை செய்வார், தன் தன் பாவம் நன்றறிவார். 7 ஆம் நீரும் மானுடனல்லவே? சோதனை வேதனை அறிவீரே, உந்தன் காருண்யம் காணுமே, மறைவாம் காயம் தெளிவாய். 8 உம் கைகள் தொட்டிட வல்லமை, உம் வார்த்தை ஒன்றும் வீணாகா, இம் மாலை எம் ஜெபம் கேளுமே, உம் கிருபையால், நீர் குணமாக்கும். | The Cyber Hymnal #15570 |