1 அப்பா நீரே எம் தந்தையே,
என் விசுவாசம் உம்மேல்,
என் துன்பகாலம் நெருங்க,
நம்புவேன் உம்மையே.
2 தயவாய் காக்கும் தேவன் நீர்,
தொட்டில் முதல் முற்றும்,
உம் பாதுகாப்பில் இருந்தேன்,
தாயின் கரு முதல்.
3 சிறு பிராயம் முதல் என்னை,
காத்தீர் என் வாலிபத்தில்,
என் காலம் உம்முடன் வர,
நான் சாகும் மட்டுமே.
4 உம் வல்லமை நான் உணர்வேன்,
உம் தோள் வலிமையும்,
நீரே என் மீட்பர் என்றென்றும்,
இம்மட்டும் நீர்தானே.
5 என் வாழ்வின் வேதனை காலம்,
நீர் தூரே செல்லாமல்,
காணாமல்போகும் நண்பர்போல்,
போர்கால வேளையில்.
6 உம்மை நம்ப நீர் ஈந்தீரே,
என் வாழ்வு துவங்கி,
திக்கற்றோனாய் அனாதயாய்,
திரிந்தபோதுமே.
7 முதிர் வயதிலும் என்னை,
துன்பம் சூழ் வேளையில்,
துக்கித்தலையாமல் நீரே,
என் சொற்ப்ப நாட்களில்.
8 என் வாழ்வினில் என்றும் உம்மை,
நம்பி என் முடிவிலும்,
நான் மாண்டபின்னும் போற்றவே,
காலம் இல்லா காலம்.
Source: The Cyber Hymnal #15535