1 எந்தன் ஜீவன் இயேசுவே,
சொந்ததமாக ஏற்பீரே,
இந்த நேரம் எவ்வேளையும்,
உந்தன் புகழ் நான் பாடுவேன்.
2 கைகளால் என் செய்கையும்,
உந்தன் அன்பைக்காட்டவும்,
எங்கென் கால்கள் போயினும்,
விரைவாய் சீராய் செல்லுமே.
3 எந்தன் குரலின் ஓசையும்,
உமக்கே தந்தேன் இயேசுவே,
உதட்டின் நாவின் சொற்களும்,
உம் நற்செய்தி கூறவும்.
4 ஆஸ்தி பணமும் செல்வமும்,
சல்லி காசும் எனதல்ல,
அறிவு ஞானம் சிந்தையும்,
நீரே எடுத்து ஆண்டிடும்.
5 எந்த செயலும் எனதல்ல,
உமது திட்டமே நடத்துமே,
உள்ளம் ஆன்மா உமதன்றோ?
அதில் நீர் வாசம் செய்வீரே.
6 அன்பு ஆசை அனைத்துமே,
சமர்ப்பித்தேன் உம் பாதமே,
முற்றும் நீர் என்னை ஏற்பீரே,
உமது பிள்ளை நான் என்றுமே.
Source: The Cyber Hymnal #15642