1 நைந்த என் ஆத்துமத்திற்கு,
புகலிடம் நீரே,
என் துன்ப நேரத்திலுமே,
என் நம்பிக்கையும் நீரே நீர்தாமே.
2 பயம் என்னை சூழ்ந்தாலுமே,
பற்றிக்கொள்வேன் நான் உம்மை,
உம் பாதம் வைத்தேன் பாரம் வேதனையும்
ஊற்றுவேனே நான் அங்கே.
3 நான் உம்மிடம் ஏறெடுப்பேன்,
நீர்தான் என் ஆறுதல்,
உம் வார்த்தை இன்ப தீர்வாமே,
என் நோய்க்கும் ஒளஷதமுமாகுமே.
4 சந்தேகம் சோர்வும் நெருக்க,
பயந்தேன் உம்மை நோக்க,
உம் தேற்றுதல் காணாமலே,
விஸ்வாசம் குன்றி அஞ்சினேனே நான்.
5 எங்கே நான் செல்வேன் நீரின்றி
என் பற்று வேரில்லை,
என் ஆன்மா உம்மில் சார்ந்திட,
வீழ்ந்தேன் உம் பாதம் சாஷ்டாங்கமாக.
6 அழைத்தீரே நீர் உம்மண்டை
வீணேபோமோ? நான் வந்திட்டால்
கண் காணாமல் இருப்பீரோ?
நான் கெஞ்சும் போது ஆண்டவா.
7 கருணை கொண்டே நீர் கேட்பீரே,
என் வேதனை நான் காண்பேன்
உந்தன் காருண்யம் என் வியாகுலம்
அங்கே உம் பாதம் வைப்பேனே.
8 உம் தயவின் கிருபாசனம்
நான் இளைப்பாரவே,
உம் பாதம் நின்று உம் சித்தம் நான்
செய்தென்றும் காத்திருப்பேனங்கே.
Source: The Cyber Hymnal #15774