1 உம் தயவு கிருபையால்
மற்றோர் ஆண்டும் வந்ததே,
தந்தோம் கேளும் மீட்பரே
எங்கள் துதி நன்றியை.
2 எங்கள் பாவம் யாவுமே,
வைத்தோம் உந்தன் பாதமே,
சென்ற தோல்வி மறந்தே
எதிர் கொள்வோம் வெற்றியே.
3 எதிர்காலம் இருளோ?
வீசும் உந்தன் ஒளியே,
பெலனில்லை போராட
உந்தன் கிருபையால் தாங்கும்.
4 சோதனை பெலவீனம்,
பூரண பெலன் தாரும்,
திக்கற்று அலைகையில்
நீரே மெய் நல் வழியாம்.
5 இவ்வாண்டே என் முடிவோ?
என்றெண்ணுவோர் பாருமே,
உம் கோல் தடி தேற்றுமே
ஆற்றும் அங்கலாய்ப்பினை.
6 தூய்மை விசுவாசமாய்,
என்றும் உந்தன் பிள்ளையாய்,
ஏற்பீர் காப்பீர் நடத்தி
ஜீவ கிரீடம் பெறவே.
7 உமதாட்சி கோட்டையில்
தங்க யாழ் இசைக்க யாம்,
உம்மாலே தான் ஆகுமே
இராஜ இராஜன் கர்த்தாவே.
Source: The Cyber Hymnal #15631