15726. சூர்யனின் கதிர்போல் ஒளிர்வாய்

1 சூர்யனின் கதிர்போல் எங்கே சென்றாலும்,
ஒளிர்வாய் அவர்க்காய், இருள் அகற்றி,
துக்கித்தேர்க்கு இன்பம் கண்ணீர் துடைத்தே,
ஆசீர்வாதமாக எங்கே சென்றாலும்,

பல்லவி:
ஒளி வீசு நீயும் எங்கு சென்றாலும்,
மீட்பருக்காய் நீயே பிரகாசமாக.

2 சூர்யனின் கதிர்போல் எங்கே சென்றாலும்,
ஆற்றி தேற்றி அன்பாய் தாழ்ந்தோர் மேலோங்க,
தயவான வார்த்தை புன்முறுவலும்,
அவர் பாரம் நீங்க அனைவருக்கும், [பல்லவி]

3 சூர்யனின் கதிர்போல் எங்கே சென்றாலும்,
இன்முகமே வேண்டும் நீ தருவாயே,
இவ்வுலகின் சோகம் நீயும் நீக்கலாம்,
மகிழ்வித்தே நீயும் சூர்ய ஒளிபோல், [பல்லவி]

4 சூர்யனின் கதிர்போல் எங்கே சென்றாலும்,
பிரகாசமாய்த்தோன்றும் உந்தன் கிரீடத்தில்,
மற்றோரின் பிரகாசம் உன்மீதும் வீசும்,
இன்பமாய் விண்வீடு கண்ணில் வைப்பாயே [பல்லவி]

Text Information
First Line: சூர்யனின் கதிர்போல் எங்கே சென்றாலும்
Title: சூர்யனின் கதிர்போல் ஒளிர்வாய்
English Title: Be a ray of sunshine everywhere you go
Author: Anna B. Russell
Translator: S. John Barathi
Refrain First Line: ஒளி வீசு நீயும் எங்கு சென்றாலும்
Language: Tamil
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score

Suggestions or corrections? Contact us