15752. தோட்டத்திலே

1 நான் தோட்டத்தில் தனியனாய்,
பனி சாரல் ரோஜாவின் மீது,
எந்தன் காதில் ஓசை நான் கேட்கிறேன்,
என் இயேசு மீட்பர் சப்தமே,

பல்லவி:
அவர் என்னுடனே நடக்கிறார்,
அவர் சொந்தம் நான் என்கிறார்,
என்ன இன்பம் நாம் அவர் பிள்ளைகள்,
வேர் யாரும் அறியாரே.

2 இனிமையாம் அவர் குரல்,
அங்கு பாடும் பறவை கேட்க,
அந்த கீதம்தான் அவர் தந்ததே,
என் ஆன்மா பாடுதே இதோ, [பல்லவி]

3 நான் அவருடனிருப்பேன்,
இன்னும் இராமுழுவதும் இங்கே,
என்னை போவென்றார் அவர் அன்பின்
வார்த்தை என்னை ஈர்த்ததே இதோ, [பல்லவி]

Text Information
First Line: நான் தோட்டத்தில் தனியனாய்
Title: தோட்டத்திலே
English Title: I come to the garden alone
Author: C. Austin Miles
Translator: S. John Barathi
Refrain First Line: அவர் என்னுடனே நடக்கிறார்
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [நான் தோட்டத்தில் தனியனாய்]
Composer: C. Austin Miles
Key: A♭ Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us