1 நான் தோட்டத்தில் தனியனாய்,
பனி சாரல் ரோஜாவின் மீது,
எந்தன் காதில் ஓசை நான் கேட்கிறேன்,
என் இயேசு மீட்பர் சப்தமே,
பல்லவி:
அவர் என்னுடனே நடக்கிறார்,
அவர் சொந்தம் நான் என்கிறார்,
என்ன இன்பம் நாம் அவர் பிள்ளைகள்,
வேர் யாரும் அறியாரே.
2 இனிமையாம் அவர் குரல்,
அங்கு பாடும் பறவை கேட்க,
அந்த கீதம்தான் அவர் தந்ததே,
என் ஆன்மா பாடுதே இதோ, [பல்லவி]
3 நான் அவருடனிருப்பேன்,
இன்னும் இராமுழுவதும் இங்கே,
என்னை போவென்றார் அவர் அன்பின்
வார்த்தை என்னை ஈர்த்ததே இதோ, [பல்லவி]
Source: The Cyber Hymnal #15752