15777 | The Cyber Hymnal#15778 | 15779 |
Text: | பழிவாங்கும் குணமில்லார் |
Author: | John Needham |
Translator: | S. John Barathi |
Tune: | [பழிவாங்கும் குணமுள்ள] |
Composer: | John Bacchus Dykes |
Media: | MIDI file |
1 பழிவாங்கும் குணமுள்ள,
மோசே அல்ல இயேசு,
சமாதானத்தின் தூதரே,
மீட்டே இரட்சிக்கவே.
2 மாந்தரின் வியாதி வேதனை,
தீர்க்கும் நல் வைத்யரே,
கேட்டவர் அவர்கள் வேண்டலை,
கனிவாய் காண்பாரே.
3 வல்லமையான வார்த்தையால்,
கண்கள் விழித்திதோ,
இமைகள் திறந்தே காணுமே,
இன்பமாய் ஒளிரவே.
4 வாதையால் கால் கரம் வீழ்ந்தவர்,
ஒன்றும் அசையாமல்,
ஊன்றுகோல் ஆசனம் தேடாமல்,
மான்போலே துள்ளுவார்.
5 வாய்பேசார் செவிடர் ஊனரும்,
சொல் கேட்டு பேசுவார்,
தன் ஓசை மீண்டும் கேட்டிட,
பாடியே துதிப்பாரே.
6 தீண்டொண்ணா குஷ்டரும் பார் இதோ,
மீட்பரின் கை தொட,
வாதை கொண்டோர் சப்பாணியும்,
மீண்டாரே வார்த்தையால.
7 சிற்றமாய் வீசும் புயல் காற்றும்,
வார்த்தைக்கேட்டமைதியாய்,
பேய்களும் பிசாசும் ஓடுமே,
மீண்டே வராமலே.
8 என் ஆன்மமே நீ சொல் சென்று,
மீட்பரின் வல்லமை,
கல்லரை சென்றோரும் கேட்டிதோ,
மீண்டார் மௌனம் விட்டு.
9 ஆண்டவர் மீட்பர் இயேசுவே,
பிரகாசம் உம் மேன்மையே,
உம் செயல் யாவும் பிரஸ்தாபிக்கும்,
உம் திவ்ய வல்லமை. ஆமேன்.
Text Information | |
---|---|
First Line: | பழிவாங்கும் குணமுள்ள |
Title: | பழிவாங்கும் குணமில்லார் |
English Title: | No rod of vengeance Jesus takes |
Author: | John Needham |
Translator: | S. John Barathi |
Meter: | C.M. |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [பழிவாங்கும் குணமுள்ள] |
Composer: | John Bacchus Dykes |
Key: | G Major or modal |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |