
Author: Jane C. Bonar; S. John Barathi Meter: 10.10.12.10 Appears in 1 hymnal First Line: மங்கி மறைந்திடு, மாய சிற்றின்பம் Lyrics: 1 மங்கி மறைந்திடு, மாய சிற்றின்பம்,
ஒன்றும் வைக்காமலே, முற்றும் எல்லாம் நீங்க.
காடும் வனமுமே, இருளாய் தோன்றுதே,
என் இயேசு மட்டுமே புகலிடமாமே.
2 சோதித்தென் உள்ளத்தை, காத்திருக்காமல்,
இங்கே நான் என்றென்றும் தங்கிடுவேனோ?
மண்ணல்லோ நானுமே? நாள் ஒன்றே வாழவே,
என்னை நீ தாண்டிச்செல் என் இயேசு என் சொந்தம்.
3 இரா காணும் சொப்பனம், காலை உதயம்,
என் வாஞ்சை வீணல்லோ? எல்லாமே மாயையே,
என் இயேசு தீர்த்தாரே, பிரியா விடை தந்தேன்,
என் இயேசு மட்டுமே எனக்கு போதுமே.
4 இம்மையே போகிறேன் மறுமை காண,
ஓய்வின் நல் காட்சியே, மெய் அன்பின் ஆசீரே,
ஆ எந்தன் நேசரின் மார்பினில் சார்ந்திட,
என் இயேசு மட்டுமே அவர் என் சொந்தமே. Used With Tune: LUNDIE
இயேசு என் சொந்தம்