1 என் காலம் உம் கையில்,
அவ்வாரே வாஞ்சிப்பேன்,
என் வாழ்வு ஆன்மா நண்பரும்
நான் வைத்தேன் உம்மிடம்.
2 என் காலம் உம் கையில்,
எவ்வாரிருப்பினும்,
இன்பம் துன்பம் ஒளியிருள்
நன்றானதுமக்கு.
3 என் காலம் உம் கையில்,
எனக்கேன் சந்தேகம்,
நீர் என் தந்தை கைவிடீரே
நான் கண்ணீர் விடேனே.
4 என் காலம் உம் கையில்,
நீர் குருசில் மாண்டீரே,
என் பாவம் உம் கை துளைத்தே
இப்போதென்னைக்காக்க.
5 என் காலம் உம் கையில்,
நீர் என் காப்பாளரே,
உம் கை வீணே நீளுமோ?
நீர் என்றும் என் தாபரம்.
6 என் காலம் உம் கையில்,
நான் என்றும் நம்புவேன்,
நான் மாண்ட பின்பு என்றும் நான்
உம் வலப்புறமே.
ஆமேன்.
Source: The Cyber Hymnal #15668