1 என் கோட்டையாம் கன்மலை நோக்கி,
என் ஆன்மா நம்பி ஏக்கமாய்,
திகிலும் பயமும் எனை சூழ,
இரட்சிப்பிற்காய் காத்து நிற்க.
2 தூயோரும் நம்பி அவரையே,
உள்ளத்தை ஊற்றி காத்திருந்தே,
ஒத்தாசையில்லா பகை சூழ,
ஆண்டவரே எல்லாம் நமக்கே.
3 உலகின் மேலோர் பொய்யரன்றோ?
வீணன்றோ அவரை நம்புதலே,
சீர்தூக்கி பார்ப்பின் சரி சமமே,
பறந்திடும் காற்றன்றோ எவரும்?
4 பொன் பொருளை நம்பிடலாமோ?
மிளிரும் தூசியில் விசுவாசம்?
பறந்திடும் புகை நீ பற்றிடவோ?
ஆண்டவர் வாக்கை நம்பாமல்.
5 அவர் குரல் ஓர்நாள் ஓலித்திட்டதே,
மீண்டும் மீண்டும் கேட்டிட்டதே,
அவர் வல்லமை என்றும் நித்தியமே,
பயந்து நாம் நம்பிட மிக நலமே.
6 அவர் வல்லமை என்றும் தனித்து வரா,
கிருபையும் உடன் வரும் சிம்மாசனம்.
உம் தயவும் நீதி நியாயங்களும்,
பகிரலாமோ? எம் வெகுமதிகள்.
Source: The Cyber Hymnal #15654