1 இன்னோர் நாளும் இதோ,
கிருபைகூறும் நீரே,
ஆம் மீண்டும் சூர்யன் சாயும் முன்,
உம் அண்டை சேரவே.
2 இன்றும் யாம் முயல,
எம்பிரயாசம் தானே,
ஆம் நீர் காத்திடும் உள்ளங்கள்,
ஒவ்வோர் நிமிடமும்.
3 பயத்தோடே இந்நாள்,
சோதனைகள் இதோ,
ஆம் பாவம் காத்திருக்குதே,
முடிவும் நெருங்க.
4 நம்பிக்கையில் இந்நாள்,
நீர் எம்மோடிருக்க,
உம் வல்லமையே போதுமே,
எம்மைக்காத்திடவே.
5 கிருபையின் இன்னோர் நாள்,
எம் பாதைக்குதவ,
இன்னோர் அடி வைத்தோம் முன்னே,
நித்ய வாழ்வை நோக்கி.
ஆமேன்.
Source: The Cyber Hymnal #15623