1 வேதனை நோவுற்றோர்கெல்லாமே,
தூதனின் ஒளஷதம் வந்திறங்க,
ஒவ்வோர் உபாதைக்கும் விடுதலையாய்,
வீடில்லாதோர்கும் அடைக்கலமாம்.
2 காயப்பட்டோர் கண்கள் வேண்டி நோக்க,
மௌனமாய் சுருங்கும் புருவங்களும்,
உம் வாசல் திறந்திடும் முனகலுக்கே,
தடையின்றி சிறிதெனும் ஓசையின்றி.
3 யார் உன் உடன்பிறப்பறிவாயோ?
தெருவோரம் காயத்துடன் கிடப்பவரே,
அவர் தேவை நமது, கரம் தரவே,
வந்திட அழைத்திடும் நம் வாசல்.
4 பயந்து நாம் கேட்க வேண்டாமே,
அவர் யாரோ? எதற்கோ? எவ்வாறோ?
நம் இதயங்களும், நம் உடலும்,
யாவும் இரத்தம், நாம் மனு இனமே.
5 நிற்கும் நாம் வீரர் காத்திடவே,
பலவித காயம் உடல் நொறுங்கி,
விஞ்ஞானம் பொறுமை, நம் கை நேர்த்தி,
மீட்டிட உதவிட குணப்படுத்த.
6 இரக்கத்தின் தந்தையே உம் கரமே,
எம் கைகள் பிடித்திட வேண்டுகின்றோம்
பரம வைத்தியரே நீர், எம்முடனே,
எங்கள் தூய சேவை உம் பெலனால்.
7 உண்மை ஒளி அன்பின் காரணரே,
எம் வாழ்வில் பகிர்ந்தீர், அன்பாக,
எம்மோடிருந்து நீர் செயலாற்றும்,
துதி மகிமை, யாவும் உமக்கே.
Source: The Cyber Hymnal #15545