15601 | The Cyber Hymnal#15602 | 15603 |
Text: | இரா முழுதும் |
Author: | Melvia Booker |
Translator: | S. John Barathi |
Tune: | [எந்தன் இயேசு என்னை காப்பார், இரா முழுதும்] |
Harmonizer: | Luther O Emerson |
Media: | MIDI file |
1 எந்தன் இயேசு என்னை காப்பார், இரா முழுதும்,
தன் அநாதி தீர்மானமே முன்னே செல்வார்,
பாவ இருள் சாவு துக்கம், பாதுகாத்து காலைமட்டும்
இந்த லோகின் கடன் வேண்டாம், இரா முழுதும்.
2 இராவின் இருள் நீண்டு நிழல் சூழ்ந்திடுதே,
சாத்தான் எந்தன் பாதை சுற்றி இரா முழுதும்
எந்தன் பாதை இயேசுஸ்வாமி ஆபத்தின்றி
பாரமெல்லாம் இலகுவாக்கி, பயமின்றி இரா முழுதும்.
3 கேள், அதோ ஓர் மென்குரல்தான், இரா முழுதும்,
ஆண்டவரின் அன்பு குரல், கேள் கேள் இதோ,
எத்திசையும் எந்த நாடும்,
நியாயத்தீர்ப்பின் நீங்கலாமோ?
பூமியின் மாஇருள் காலம் இரா முழுதும்.
4 நீதியின் மா சூர்யன் வர, இரா போகுமே,
அந்த நாளும் வேகம் வரும், இரா நீங்குமே,
தூங்கும் தூயர் துயில் எழ,
சேர்ந்து நாமும் பாடி போற்ற
வேந்தரென கிரீடம் சூட இரா ஓயுமே.
Text Information | |
---|---|
First Line: | எந்தன் இயேசு என்னை காப்பார், இரா முழுதும் |
Title: | இரா முழுதும் |
English Title: | Jesus Christ my Lord will keep me |
Author: | Melvia Booker |
Translator: | S. John Barathi |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [எந்தன் இயேசு என்னை காப்பார், இரா முழுதும்] |
Harmonizer: | Luther O Emerson |
Key: | G Major or modal |
Source: | Welsh Tune |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |