15677. என்னை சுத்தமாக்குமே

1 மா தயாள ஆண்டவா, உம் முகம் காட்டிடும்,
வியாதியோடன்று வந்தோர் போல்,
இன்று நான் வந்தேனே.
உம்மாலே கூடும் ஆண்டவா,
என் பாவம் போக்கிட,
நான் உடைந்தோனாய் வந்தேனே,
என்னையாட்கொள்ளுமே.

பல்லவி:
என்னை சுத்தமாக்குமே,
என் ஆன்மா வாழவே,
உம்மையே பற்றி நான் விடேன்
என் விசுவாசத்தால்.

2 ஆண்டவா சுகமாக்குமே,
நான் கெஞ்சி நிற்கின்றேன்,
உம் பாதம் வீழ்ந்தேன் நான் இதோ,
என் வேண்டல் கேளுமே.
உம் மீதில் என் விஸ்வாசமே,
என்றுமே வீணாகா,
நான் நம்பினேன் என் ஆண்டவா,
என்னை சுத்தமாக்கும். [பல்லவி]

3 என்னை நீர் தூய்மையாக்குமே,
கெஞ்சுகின்றேன் உம்மை,
கேட்டேன் நான் உந்தன் வாக்கிதோ,
என் விசுவாசத்தால்,
என் உள்ளில் ஆனந்தம் இதோ,
என் கண்ணீர் தீர்ந்ததே,
ஆம் அன்பின் வார்த்தை கேட்கிறேன்,
போ பாவம் செய்யாதே. [பல்லவி]

Text Information
First Line: மா தயாள ஆண்டவா, உம் முகம் காட்டிடும்
Title: என்னை சுத்தமாக்குமே
English Title: Gracious Lord, Thou canst_make_me_clean
Author: Fanny Crosby
Translator: S. John Barathi
Refrain First Line: என்னை சுத்தமாக்குமே
Language: Tamil
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score

Suggestions or corrections? Contact us