15727 | The Cyber Hymnal#15728 | 15729 |
Text: | சோதனையால் விழாதே |
Author: | Horatio R. Palmer |
Translator: | S. John Barathi |
Tune: | [சோதனையால் விழாதே] |
Composer: | H. R. Palmer |
Media: | MIDI file |
1 சோதனையால் விழாதே,
வீழ்தல் பாவமன்றோ?
ஒவ்வொரு வெற்றியும் பாடம்,
ஒவ்வொன்றும் ஒருவிதம்,
போராடு நீ தைரியமாய்,
இருளில் சிக்காமலே,
இயேசுவை நீ நோக்கு,
அவர் வழி செய்வார்,
பல்லவி:
இரட்சகர் துணை நீ நாடு,
காப்பார் இருந்துன்னோடு,
வந்து தன் பெலன் ஈந்து,
இறுதி வரையிலே.
2 துஷ்டரோடிணங்காதே,
வார்த்தை கவனம் வை,
தேவனின் நாமம் நீ வீணே
வழங்காய் என்றுமே,
ஞானமாய் நீ நிதானமாய்,
கனிவுடன் கருத்தாய்,
இயேசுவை நீ நோக்கு,
அவர் பார்த்துக்கொள்வார், [பல்லவி]
3 வெற்றி பெற்றோர்க்கு கிரீடம்,
தேவன் அருளுவார்,
விசுவாசத்தால் நாம் வெல்வோம்,
விழுந்து எழுந்தோராய்,
நம் மீட்பர் அவரே,
நம் பெலன் புதுப்பிப்பார்,
இயேசுவை நீ நோக்கு
அவர் யாவும் செய்வார், [பல்லவி]
Text Information | |
---|---|
First Line: | சோதனையால் விழாதே |
Title: | சோதனையால் விழாதே |
English Title: | Yield not to temptation |
Author: | Horatio R. Palmer |
Translator: | S. John Barathi |
Refrain First Line: | இரட்சகர் துணை நீ நாடு |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [சோதனையால் விழாதே] |
Composer: | H. R. Palmer |
Key: | B♭ Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |