Go Ad-Free
If you regularly use Hymnary.org, enhance your experience with Hymnary Pro—ad-free browsing plus powerful tools for planning, discovery and customization.
| 15740 | The Cyber Hymnal#15741 | 15742 |
| Text: | தூதரே, கல்லை புரட்டுங்கள் |
| Author: | Thomas Scott |
| Translator: | S. John Barathi |
| Tune: | [தூதரே கல்லை புரட்டுங்கள்] |
| Composer: | Cesár Malan |
| Media: | MIDI file |
1 தூதரே கல்லை புரட்டுங்கள்,
சாவே உன்தன் பிடி விடுவாய்,
மீட்பர் உயிர்த்தார் பாருங்கள்,
மரணத்தை ஜெயித்தே,
மரணத்தை ஜெயித்தே.
2 பாரீர் மீட்பர் தூதரே,
எக்காளங்கள் ஊதுவீர்,
பூவின் எல்லை எங்குமே,
இன்ப ஓசை கேட்கட்டும்,
இன்ப தொனி கேட்கட்டும்.
3 தூயோரே நீர் காணுவீர்,
மா மகிமை காட்சியே,
விண்ணின் விளிம்பில் தோன்றியே,
மேலோர் தாழ்ந்தோர் காணவே,
மேலோர் தாழ்ந்தோர் காணவே.
4 விண்ணின் வாசல்கள் திறந்ததே,
வேந்தர் வேந்தன் வந்திட,
எல்லையில்லா எத்திசையும்,
அவர் ஆள்வார் என்றென்றுமே,
அவர் ஆள்வார் என்றுமே.
5 விண் தூதரே போற்றுவீர்,
யாழ் எக்காள இசை முழங்க,
பேரானந்த ஓசையாய்,
இன்பமாய் தொனித்திட,
இன்பமாய் தொனித்திட.
6 ஓவ்வோர் ஓசையும் முழங்கட்டும்,
மாய்ந்தே மரணம் வீழ்ந்ததே,
எங்கே நரகை ஆண்ட ராசன்?
சாவே உந்தன் கூர் எங்கே?
சாவே உந்தன் கூர் எங்கே?
| Text Information | |
|---|---|
| First Line: | தூதரே கல்லை புரட்டுங்கள் |
| Title: | தூதரே, கல்லை புரட்டுங்கள் |
| English Title: | Angels roll the rokc away |
| Author: | Thomas Scott |
| Translator: | S. John Barathi |
| Meter: | 77.77.77 |
| Language: | Tamil |
| Copyright: | Public Domain |
| Tune Information | |
|---|---|
| Name: | [தூதரே கல்லை புரட்டுங்கள்] |
| Composer: | Cesár Malan |
| Key: | F Major or modal |
| Copyright: | Public Domain |
| Media | |
|---|---|
| Adobe Acrobat image: | |
| MIDI file: | |
| Noteworthy Composer score: | |