15743. தூய இரவு

1 தூய இரவு, விண்மீன்கள்
வானில் மின்ன, நம் மீட்பர்
இயேசு இன்று பிறந்தாரே,
நீண்ட காலமாய், பாவ சாபம் மாய்க்க,
நம் ஆண்டவர் தோன்றி உணர்த்தினார்,
ஆ என்ன நம் உள்ளம்
ஆனந்தித்தே பாடுதே,
ஒர் புது காலையும் இதோ,

சாஷ்டாங்கம் செய் இதோ
விண் தூதர் பாடல்,
ஆ தூய இரா நம் ஆண்டவர்
பிறந்தார், இரா தெய்வீகமே,
மா தூயதே, ஆ மா தூய தெய்வீக இரா.

2 பின் சென்றனர், நம்பிக்கை ஒளி
பின்னே, ஆனந்தமாய் அவர்
முன்னணை முன்னே,
விண் நட்சத்திரம், ஆ வானில்
மின்னவே, வழிகாட்ட
ஞானியர் தொடர்ந்தே,
நம் ராஜாதி ராஜன் ஏழைக்கோலமாய்
நம் பாவம் போக்கி நம் நண்பனாய்,

நம் தேவைகள், பெலவீனமும்,
அறிவார் நம் ராஜாவை
வணங்குவோம், இதோ,
நம் ராஜா, ராஜனே,
மா ராஜாதி ராஜனே.

3 நாம் பிறர் மேல், அவர்போல்
அன்பாக, நேசிப்பதே அவர் தந்த சட்டமே,
அறுத்தெறிவார், கட்டுண்டோர்க்கவர்
நண்பன், நம்மை அவர் விடுதலை செய்வார்,
நாம் ஆனந்த பாடல் பாடி போற்றியே
நம் முழு உள்ளம் கொண்டு துதிப்போம்,

போற்றிடுவோம் அவர் வல்ல
மகிமை, என்றென்றுமே,
நாம் வாழ்த்தி பாடுவோம், என்றும்
நாம் போற்றுவோம் நம் ராஜனை,
போற்றுவோம் போற்றுவோம்
என்றென்றுமே.

Text Information
First Line: தூய இரவு, விண்மீன்கள்
Title: தூய இரவு
English Title: O holy night, the stars are brightly shining
Author: John Sullivan Dwight, 1813-1893
Translator (Tamil): S. John Barathi
Refrain First Line: சாஷ்டாங்கம் செய் இதோ
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [தூய இரவு, விண்மீன்கள்]
Composer: Adolphe Adam, 1803-1856
Key: D♭ Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us