1 அசையாதே ஆண்டவர் உன் துணை,
துக்கமாம் பார சிலுவை இதே,
ஆண்டவரே, பார்த்துக்கொள்வார்,
அவரே, எல்லாவற்றிலும்,
தம் வாக்கு மாறிடார், அசையாதே,
உன் ஆத்ம நண்பர் அவர்,
எக்காலத்திலும், முடிவில் ஆனந்தம்.
2 அசையாதே, அவர்தாம்
பாதுகாப்பார், உன் எதிர் காலம்
அவர் கடந்தார், உன் விசுவாசம்
அசையாமல் வைப்பாய்,
உன் சந்தேகங்கள், யாவுமே நீங்கிடும்,
அசையாதே, காற்றும் அலைகளுமே,
அவரை நன்றே அறிந்திடும்.
3 கலங்காதே, உன் நண்பர்
மாண்டு போவார், எல்லாமே
இருளாய் தோன்றுமே, இப்போது நீ
அவரின் அன்பை காண்பாய்,
உந்தன் கண்ணீரை, அவரே துடைப்பார்,
கலங்காதே, உன் இயேசுவே அவரே,
உந்தன் கடனை முற்றிலும் தீர்ப்பாரே.
4 நெருங்குதே, அந்நேரம் விரைவாய்,
நாமெல்லோரும், நம் ஆண்டவருடன்,
பயமின்றி துக்கத்தின் பாரம் நீங்கி
என்றென்றும் நாமே, அன்பின் ஆனந்தமே,
கலங்கிடேன், நம் கண்ணீரும் நீங்குமே,
நாம் பத்திரமாய், ஆனந்தமாய் என்றும்.
5 ஆனந்தமாய் நாம் பாடி போற்றுவோம்,
இவ்வுலகம் விட்டே விண்ணேகுவோம்,
நம் ஆண்டவர், நமக்காய் செய்த
நன்மை, நன்றியுடனே, துதித்துப்பாடியே,
ஆனந்தமாய், நம் நீதியின் சூர்யனை,
மேகம் கடந்து பின் என்றும் ஒளியில்.
Source: The Cyber Hymnal #15529