15620. இன்றென் வாழ்வில் வந்ததே ஒளி

1 இன்றென் வாழ்வில் வந்ததே ஒளி மா பிரகாசமாகவே,
இந்த பூவில் காண கூடாதே, என் இயேசு என் ஒளி,

பல்லவி:
ஆம் என் வாழ்வில் எந்தன் வாழ்வில்
உண்மை சாந்தம் என்றும் அமைதி
எந்தன் இயேசுவின் நல் அன்பு முகமே,
ஆம் தோன்றும் என் வாழ்வில்.

2 எந்தன் உள்ளம் பொங்கி பாடுதே, அன்பு மீட்பர் இராஜாவே,
எந்தன் இயேசு கேட்பார் அறிவேன், நான் பாடா(த) பாடலும், [பல்லவி]

3 எந்தன் வாழ்வின் நல் வசந்தமே, ஆண்டவர் என் பக்கமே,
பாடும் எந்தன் உள்ளம் மகிழ்ந்தே, பூஞ்சோலை தோன்றுதே, [பல்லவி]

4 ஆனந்தமாய் எந்தனுள்ளமே, ஆம் என் நம்பிக்கையுமே,
ஆசீர் என்மேல் வந்திறங்குதே, விண் வீடும் எனக்காய், [பல்லவி]

Text Information
First Line: இன்றென் வாழ்வில் வந்ததே ஒளி மா பிரகாசமாகவே
Title: இன்றென் வாழ்வில் வந்ததே ஒளி
English Title: There is sunshine in my soul today
Author: Eliza E. Hewitt
Translator: S. John Barathi
Refrain First Line: ஆம் என் வாழ்வில் எந்தன் வாழ்வில்
Language: Tamil
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us